ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக ஹவாயின் புதிய இயங்குதளம் !

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (17:15 IST)
சீனா அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே  சமீப காலமாக வர்த்தகப் போர் மூண்டுள்ளது.  இதனால் சீனா தேசத்தின் ஸ்மார்ட்  போன் நிறுவனமான ஹவாய்யின் உற்பத்தி கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இதில், சீனாவில் ஸ்மார்ட் போன் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுவந்த நேரத்தில், அந்த போன் மூலம் உளவு பார்க்கப்படுவதாகவும் சீனாவில் இதுபோன்று நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. 
 
இதனையடுத்து, சீனா ஸ்மார்ட் போன் நிறுவனமாக ஹவாயை அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்தது. இதனையடுத்து கூகுள் நிறுவனத்தினுடைய ஆண்டிராய்டின் சிறப்பு சேவைகளைப் பெருவதில் ஹவாய் சாதனங்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. 
 
இதுமேலும் தொடர்ந்தால்,விதிகள் தளர்த்தப்படும் என்று, டிரம்ப் அறிவித்த போதிலும், நிலையில் அதுகுறித்த குழப்பம் மேலிட்டது.  ஆனால் இதுகுறித்து குழப்பமான சூழ்நிலை உண்டாவதை தவிர்ப்பதற்காக ஹாங்மெங் என்ற சொந்த இயங்குதளத்தை ஹவாய் நிறுவனம் வடிவமைத்துள்ளதாகவும் இந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்