தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம்??

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (17:01 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

 
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.
 
இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தலில் எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என்ற விவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 
 
சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்யலாம்.

மற்ற மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் ரூ.85 ஆயிரம் வரை செலவு செய்யலாம்.
 
தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அந்தஸ்தில் உள்ள நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு ரூ.85 ஆயிரம் வரை செலவு செய்யலாம்.

2 ஆம் நிலை மற்றும் முதல் நிலை அந்தஸ்தில் உள்ள நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு ரூ.34 ஆயிரம் வரை செலவு செய்யலாம்.

3 ஆம் நிலை நகராட்சி வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு ரூ.17 ஆயிரம் வரை மட்டுமே செலவு செய்யலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்