அதற்கு பதிலளித்த அவர், "இன்றைய சூழலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பிளவுபட்டுள்ளன. அ.தி.மு.க. பிளவுபட்டுள்ளது; பா.ம.க.விலும் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இருக்கும்போது, ஆளும்கட்சியான தி.மு.க.வுக்கு தானே வெற்றி வாய்ப்பு இருக்கும்? அது கண் கூடாகவே தெரிகிறது" என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
மேலும், "வரும் தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், அது ஏன், எப்படி என்று விவாதிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ள காரணத்தால் தான் தி.மு.க.வுக்கு வாய்ப்பு இருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். நான் இதை சொல்லவில்லை" என்று குறிப்பிட்டார்.