'மோந்தா' புயல், நாளை காலை தீவிர சூறாவளிப் புயலாக வலுப்பெற்று, நாளை மாலை அல்லது இரவில் ஆந்திராவின் காக்கிநாடா அருகே தீவிரப் புயலாகக் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, நாளை ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஆந்திராவின் தெற்குப் பகுதிகளில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.