ராகுல் காந்தி நடைப்பயணத்தில் போலீசார் தடியடி.! அசாமில் பதற்றம்.!!

Senthil Velan

செவ்வாய், 23 ஜனவரி 2024 (13:30 IST)
அசாமில் ராகுல்காந்தி நடை பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
 
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடை பயணமான இந்திய நீதி பயணம் கடந்த ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கவுகாத்தி நகருக்குள் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 
 
போலீசார் அமைத்த தடுப்புகளைத் காங்கிரஸ் தொண்டர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அசாம் போலீசார், ராகுல் காந்தியின் கண் முன்னே காங்கிரஸ் தொண்டர்கள் மீது லேசான தடியடி நடத்தியதால் பதற்றம் நிலவியது.

ALSO READ: ஜன.27-ல் ஸ்பெயின் புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்.! முதலீடுகளை ஈர்க்கவும் தொழில் நிறுவனங்களை சந்திக்கவும் திட்டம்..!
 
இது குறித்து பேசிய ராகுல் காந்தி, அசாமில் பல்கலைக்கழக மாணவரிடம் பேச எனக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாணவர்களை சந்திப்பதை அசாம் முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோர் தடுக்கின்றனர் என்றும்  நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி  பல்கலைக்கழகங்களில் இதுதான் நடக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.   மேலும், அசாம் முதல்வர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் விதிகளை உடைத்துள்ளனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்