இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் 'சிறப்புத் தீவிர திருத்தப் பணி' நாடு முழுவதும் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், மேற்கு வங்க அரசு 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 47 சிவில் சர்வீஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.
SIR செயல்முறை என்றால், தேர்தல் பிழையின்றி நடக்க, வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்த்துப் பட்டியலை புதுப்பிக்கும் பணி ஆகும். இது முதலில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொடங்கவுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த செயல்முறையை கடுமையாக எதிர்க்கிறது. வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்படுவதாக கூறி, முதல்வர் மமதா பானர்ஜி பா.ஜ.க. மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார், "சரியான ஆவணங்கள் உள்ளவர்களுக்கு பாதிப்பில்லை; ஊடுருவல்காரர்கள் மட்டுமே வெளியேற்றப்படுவார்கள்" என்று கூறி, திரிணாமுல் காங்கிரஸ் ஏன் பயப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். இந்த அரசியல் சவால்களுக்கு மத்தியில், அதிகாரிகளின் இடமாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.