ஆனால் மேற்குவங்க மாநிலத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்பதால் அந்த கட்சிக்கு பெரும் தொகுதி ஒதுக்க முடியாது என திரிணாமுல் காங்கிரஸ் கூறி இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் நடந்த தொகுதி உடன்பாடு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் காங்கிரஸ் கட்சிக்கு நான்குக்கும் குறைவான தொகுதிகள் மட்டுமே கொடுக்க திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேற்குவங்க மாநிலம் தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும் அதற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்றும் அங்கெல்லாம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட மாட்டார்கள் என்றும் மம்தா பானர்ஜி கூறி இருப்பது காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.