சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து பேசினார். அவர் பேசியபோது, திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, இம்முறை கதாநாயகியாக கூட இருக்கலாம். திமுக தேர்தல் அறிக்கை எப்போதும் போல இம்முறையும் முக்கிய பங்காற்றும்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பொது மக்கள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கையை தயார் செய்வோம் என்று கூறினார்.