கஜா பாதிப்பு: நெகிழ வைத்த மனித நேயம்: நிரூபித்த தஞ்சை ஹோட்டல் உரிமையாளர்

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (15:09 IST)
கஜா புயலால் தனது ஓட்டல் சேதமடைந்த நிலையிலும், தஞ்சையை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் மக்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறார்.
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் உருகுலைந்து போயுள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தஞ்சை பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கடந்த 3 நாட்களாக கஜாவால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார். தனது கடை முழுவதுமாக சேதமடைந்த போதிலும் அவர் மக்களுக்கு உணவளித்து வருகிறார். இவர்கள் மாதிரியான மனிதர்களை பார்க்கும் போது தான் இன்னும் மனிதம் இருக்கிறது என்றே தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்