நாளை ஹோலி கொண்டாட்டம்: தேர்வு எழுத முடியாவிட்டால் மறுவாய்ப்பு! - சிபிஎஸ்இ அறிவிப்பு!

Prasanth Karthick

வெள்ளி, 14 மார்ச் 2025 (09:29 IST)

வடமாநிலங்களில் நேற்று முதலே ஹோலி கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்ட நிலையில் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

 

மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்கள் நாளை வரை சில பகுதிகளில் நீடிக்கலாம் என கூறப்படுகிறது.

 

ஆனால் அதேசமயம் நாளை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்தி மொழித்தேர்வு உள்ளது. இந்நிலையில் நாளை தேர்வு எழுத வர முடியாத மாணவர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போகும்போது வாரியத்தின் மூலமாக அளிக்கப்படும் சிறப்புத்தேர்வு சலுகையை பயன்படுத்தி இந்த மாணவர்களையும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்