நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் மசூதிகள் துணியால் மூடப்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதும் நாளை ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முக்கியமாக வட மாநிலங்களில் ஹோலி சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் மக்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே ஹோலி அன்று இஸ்லாமிய மக்கள் தொழுகைக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் மசூதிகள் துணியால் மொத்தமாக மூடப்பட்டு வருகின்றன.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் நகரில் ஹோலியை கொண்டாடும் விதமாக பேரணி நடைபெற உள்ளது. இதனால் பேரணி நடைபெறும் பகுதியில் உள்ள மசூதிகளை தார்பாய்களை போட்டு மூட மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மசூதிகள் மூடப்பட்டுள்ளதோடு, ஹோலி நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
Edit by Prasanth.K