பெயர் பலகைகளில் கருப்பு வண்ணம் பூசினால் சிறை தண்டனை.. ரயில்வே எச்சரிக்கை..!

Siva
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (09:29 IST)
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் திமுக உள்ளிட்ட கட்சிகள், ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் கருப்பு மை பூசி போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், "ஹிந்தியில் எழுதப்பட்ட ஊரின் பெயரை அழிக்கிறோம்" என்ற பெயரில் ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் கருப்பு மை பூசி சேதப்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக ஆறு மாதம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், ரயில்வே பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது.

சென்னை உள்பட பல்வேறு நகரங்களில், ரயில் நிலையங்கள், தபால் நிலையங்கள், பிஎஸ்என்எல் அலுவலகங்கள் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள ஹிந்தி எழுத்துகளை திமுகவினர் கருப்பு மை கொண்டு அழித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரயில்வே நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளை கருப்பு மையால் அழித்து சேதப்படுத்துவோர் மீது பாதுகாப்பு படையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரயில் சொத்துக்களை சேதப்படுத்தினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், குற்றம் செய்தவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும், ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்