திராவிட கட்சிகளுடன் முரண்பாடு, மாறுபட்ட கருத்து உள்ளது: ஆனால்.. திருமாவளவன்

Mahendran

புதன், 25 டிசம்பர் 2024 (16:22 IST)
திராவிட கட்சிகளுடன் எங்களுக்கு முரண்பாடு மற்றும் மாறுபட்ட கருத்து உள்ளது என்றும், ஆனால் அதே நேரத்தில் இந்த மண்ணில் சனாதன கட்சிகள் வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காகத்தான் கூட்டணியில் நீடிக்க விரும்புகிறோம் என்றும் திருமாவளவன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசிய போது, "தேர்தல் களத்தில் வாய்ப்புகள் இருக்கும் சூழலில் அந்த வாய்ப்புகள் தேவை இல்லை என முடிவெடுக்கப்பட்டது என்றால், அந்த முடிவு எத்தகைய துணிச்சல் வாய்ந்த கொள்கை சார்ந்த முடிவு என்பதை சொல்ல பலர் தயாராக இல்லை" என்றார்.

இதைச் சொல்லாமல், "திமுக அழுத்தம் கொடுப்பதாகவும் அதற்கு திருமாவளவன் பணிந்து விட்டதாகவும் கூறி வருகின்றனர். தேர்தலைப் பொறுத்தவரை எண்ணிக்கை முக்கியமானது இல்லை, நாட்டு நலன் முதன்மையானது. சனாதன கட்சிகள் இந்த மண்ணில் வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காக தான் திமுக கூட்டணியில் நீடிக்க விரும்புகிறோம்" என்று கூறினேன்.

இந்த முடிவு குறித்து யாரும் விவாதம் செய்யவில்லை. தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்ற விட வேண்டும் என சனாதன கட்சிகள் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், அந்த கட்சிகளை வலுப்பெறவிடாமல் தடுப்பதற்காக தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி முயற்சி செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

திராவிட கட்சிகளுடன் முரண்பாடு உண்டு, மாறுபட்ட கருத்துகளும் உண்டு, விமர்சனங்களும் உண்டு. ஆனால் திராவிட இயக்கங்களை பலவீனப்படுத்த கூடாது என்று நினைக்கிறோம்" என்று திருமாவளவன் பேசினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்