ஒரே நேரத்தில் சொந்த ஊருக்கு படையெடுக்கும் பொதுமக்கள்: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்..!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (16:52 IST)
சென்னையில் உள்ள தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் சொந்த ஊருக்கு செல்வதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 வார இறுதி நாட்கள் ஆன சனி ஞாயிறு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை தினங்களான திங்கள் செவ்வாய் என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனை அடுத்து தென் மாவட்டத்தை சேர்ந்த சென்னையில் இருக்கும் போது மக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்

தனியார் வாகனங்கள், கார்கள், பேருந்துகள் ஆகியவற்றில் சொந்த ஊருக்கு பொதுமக்கள் சென்று கொண்டிருப்பதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய காவல்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்றும் இருப்பினும் மணி கணக்கில் வாகனங்கள் சாலையில் நின்று கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்