32 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகுது கனமழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (15:15 IST)
தமிழ்நாட்டில் இன்று 32 மாவட்டங்களில் கன மழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இதன் காரணமாக இன்று 32 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
இன்று மழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருமாறு: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பதூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்