ஆறுமுகசாமி அறிக்கையை வைத்து அரசியல் தான் செய்யலாம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (15:09 IST)
ஆறுமுகசாமி ஆணையத்தை வைத்து அரசியல் மட்டும்தான் செய்யலாம் என்றும் வேறு எதற்கும் இந்த அறிக்கை பயன்படாது என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
 
இந்த அறிக்கையில் சசிகலா உட்பட ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆறுமுகசாமி ஆணையம் சசிகலாவை நேரில் விசாரணை செய்யவில்லை என்பது முரண்பாடாக உள்ளது
 
இந்த நிலையில் இந்த ஆணைய அறிக்கை குறித்து கருத்து கூறிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை புரபொசனல் கிடையாது என்றும் இதை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம் இதில் டெக்னிக்கலாக எதுவும் சொல்லப்படவில்லை என்றும், சட்டமன்றத்தில் இது எடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்