18 மாவட்டங்களில் இன்னும் சிலமணி நேரத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (13:26 IST)
18 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கனமழை பெய்ய போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
 
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்