அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

Siva

வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (18:14 IST)
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ராஜ் பவனில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த நிலையில், தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். த
 
ஆளுநர் ரவி தனது உரையில், “தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிக்கிறது. பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன்தான் போதைப்பொருள் விநியோகம் நடைபெறுகிறது. கஞ்சா உள்பட இரசாயன போதைப்பொருட்களின் பயன்பாடும் அதிகரித்தவாறு உள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை கெடுத்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று காட்டமாகப் பேசினார்.
 
மேலும் அரசுப் பள்ளிகளில் கல்விச் சூழல் தொடர்ந்து சீரழிந்து வருகிறது. மாணவர்கள் வேலைவாய்ப்பின்றி, வெறும் படிப்புச் சான்றிதழ் பெற்றவர்களாக மட்டுமே வெளியேறுகிறார்கள். வறிய நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையேயான கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. சமூகப் பாகுபாட்டுடன் வாழ்வதே அவர்களின் தலைவிதி என்ற நிலையாகிவிட்டது. 
 
ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்