மதியம் 3 மணிக்குள் 12 மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (12:47 IST)
இன்று மதியம் 3 மணிக்குள்  சென்னை உட்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும்  வடகிழக்கு பருவமழை காரணமாகவும் சென்னைக்கு உட்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்கள் ஆக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில்  நேற்று முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று மதியம்  3:00 மணிக்குள்  சென்னை உட்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மதியம் 3 மணிக்குள் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்