3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. 9 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்: வானிலை எச்சரிக்கை.

புதன், 15 நவம்பர் 2023 (07:56 IST)
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதை அடுத்து இன்று மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என்ற மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 9 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
வங்க கடலில் தோன்றி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகியவை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய  3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற எச்சரிககியும் விடுக்கப்பட்டுள்ளது.
 
 ஏற்கனவே சென்னை உள்பட 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்