சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை அளவு.. இன்றும் மழை நீடிக்கும்..!

புதன், 15 நவம்பர் 2023 (08:10 IST)
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது
 
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று மாலை முதல் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கோடம்பாக்கத்தில் 8.4 சென்டிமீட்டர், கத்திவாக்கத்தில் 8.4 சென்டிமீட்டர், ஆலந்தூரில் 7 சென்டிமீட்டர், அண்ணா நகரில் 7.1 சென்டி மீட்டர், திருவிக நகரில் 7 சென்டிமீட்டர், தேனாம்பேட்டையில் 7 சென்டிமீட்டர், பெருங்குடியில் 6.8 சென்டிமீட்டர், அடையாறு பகுதியில் 6.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பதிவான மழையின் அளவு தான் இது என்றும் சென்னையில் மழை தொடர வாய்ப்பு இருப்பதால் இன்னும் அதிக அளவு மழை பதிவாகலாம்  என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பல இடங்களில் கன மழை பெய்த போதிலும் தண்ணீர் தேங்காத வகையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதும் இதனால் பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்