இன்று இரவு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (17:57 IST)
இன்று இரவு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது என்பதும் அது மட்டும் இன்றி மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்ததால் சென்னை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று இரவு சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் கன மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும்  நிலையில் மீண்டும் மழை பெய்யும் என்று அறிவிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்