சுனாமியில் தத்தெடுத்த பெண்ணுக்கு திருமணம்! – நேரில் சென்று வாழ்த்திய ராதாகிருஷ்ணன்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (11:10 IST)
சுனாமியில் பெற்றோரை இழந்த பெண்ணை தத்தெடுத்து வளர்த்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெண்ணின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் தமிழகத்தில் பெரும் உயிர்பலி ஏற்பட்டது. நாகப்பட்டிணத்தில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதை ஆனார்கள். அந்த சமயம் நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த தற்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெற்றோரை இழந்த சவுமியா, மீனா என்ற இரண்டு பெண்களை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்ததும் அவர்களை வேறு தம்பதியர் தத்தெடுத்துக் கொண்டனர். இந்நிலையில் அதில் ஒரு பெண்ணான சவுமியாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்று மணமக்களை வாழ்த்தினார் ராதாகிருஷ்ணன்.

அப்போது பேசிய அவர் “சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளை நான் மட்டும் தத்தெடுத்து வளர்க்கவில்லை. இந்த நாகை மாவட்ட மக்களே வளர்த்துள்ளனர். அவர்கள் ஒன்று சேர்ந்து சவுமியாவுக்கு நடத்தி வைத்த திருமணம் இது’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்