போலீஸை அரிவாளால் வெட்டிய கும்பல்! – பழனியில் பரபரப்பு!

திங்கள், 7 பிப்ரவரி 2022 (08:55 IST)
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போலீஸை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்தான கிருஷ்ணன். நேற்று இரவு சந்தான கிருஷ்ணன் தனது நண்பர் ஆனந்தன் என்பவருடன் பேசியபடி சாலையில் நின்றுள்ளார்.

அப்போது அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு வந்த மர்ம கும்பல் ஆனந்தனையும், சந்தான கிருஷ்ணனையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தாக்கிய ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்