மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (17:58 IST)
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
நாகர்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நித்திய லட்சுமணன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. 
 
 இந்த புகாரை அடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் ரகசியமாக விசாரணை செய்ததில் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
 
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் தலைமை ஆசிரியர் நித்திய லட்சுமணன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்