நடிகை மீராமிதுனை கைது செய்ய மீண்டும் நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (18:43 IST)
பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசியதாக ஏற்கனவே நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள நிலையில் தற்போது அவரை மீண்டும் கைது செய்ய நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை மீராவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று மீராமிதுன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது
 
மேலும் நடிகை மீரா மிதுனை விசாரிக்கவும் அவரது பதிவுகளை நீக்கவும் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் ஆடியோ பதிவு செய்யப்பட்டதாக கூறும் நாளில் வேறொரு நிகழ்வில் தான் கலந்து கொண்டு இருந்தேன் என்றும் என் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மீராமிதுன் கூறியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்