நடிகர் விமல் மீது புகாரளித்த தயாரிப்பாளர் கைது

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (19:51 IST)
நடிகர் விமல் மீது புகாரளித்த சிங்கார வேலன் கைதாகியுள்ளார்.

நடிகர் விமல்  தனக்கு தர வேண்டிய பணத்தை திருப்பித் தர வேண்டும் எனவும், தன் மீது பொய் புகார் அளித்த விமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏப்ரல் 22 ஆம் தேதி தயாரிப்பாளர் சிங்காரவேலன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இந்த நிலையில், 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக  கடந்த 2020 ஆம் ஆண்டு  நடிகர் விமல் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், மன்னர் வகையறா பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்