திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவோம்: ஹரி நாடார் ஆவேசம்

Mahendran
புதன், 27 மார்ச் 2024 (10:04 IST)
திமுக 21 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அதில் ஒருவர் கூட நாடார் சமுதாய வேட்பாளர் இல்லை என்பதால் திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்று ஹரி நாடார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 பனங்காட்டு படை கட்சி என்ற கட்சியை நடத்தி வரும் ஹரி நாடார் கடந்த சில மாதங்களாக பெங்களூர் சிறையில் இருந்த நிலையில் தற்போது விடுதலை ஆகி திருநெல்வேலி மக்களை சந்தித்துள்ளார் 
 
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது’ தமிழகத்தில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு வேட்பாளர் கூட எங்கள் சமுதாயமான நாடார் சமுதாயத்தினர் இல்லை, அக்கட்சி எங்கள் சமுதாயத்திற்கு ஒரு தொகுதியில் கூட போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை 
 
எனவே வரும் மக்களவைத் தேர்தலில் எங்களை புறக்கணிக்கும் திமுகவுக்கு நாங்கள் சரியான பாடம் புகட்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் எங்கள் சமுதாய மக்களை திமுக மதிக்கவில்லை அதனால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதேபோன்று திமுக போட்டியிடம் 21 தொகுதிகளில் ஏற்படும் என்று தெரிவித்தார் 
 
ஆனால் அதே நேரத்தில் ஹரிநாடார் போட்டியிடுவது குறித்து எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்