நாடகமாடும் துரோகிகளையும் டெப்பாசிட் இழக்கச் செய்வோம்- அமைச்சர் உதயநிதி

Sinoj

செவ்வாய், 26 மார்ச் 2024 (22:52 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார்.

அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.  தற்போது  நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த நிலையில்,  இந்தியா கூட்டணி  திமுக இடம்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான இட    ஒதுக்கீடு கையெழுத்தாகி, திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
 
 
 
 
திருச்சியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில்,  நேற்று நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். 
 
 
 
இதுகுறித்து  திமுக இளைஞர் அணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:
 
 
''தமிழ்நாட்டிலிருந்து ஒரு ரூபாயை வரியாக வசூலித்தால், வெறும் 29 பைசாவை மட்டும் திருப்பித் தருகிற பகல் கொள்ளையை தடுத்து நிறுத்திட, இந்தியாவின் வெற்றி ஒன்றே தீர்வாகும். இதனை வேலூர் மாநகரில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களிடம் எடுத்துச் சொல்லி, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் அன்புச் சகோதரர் கதிர் ஆனந்த்அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டோம்.

வரலாற்றில் அடிமைத்தனத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த வேலூர் மண்ணிலிருந்து மீண்டும் ஒரு ஜனநாயக புரட்சிக்கு தயாராவோம். தேர்தல் களத்தில் இன்றைய பாசிஸ்ட்டுகளையும், அவர்களுடன் கூட்டணி இல்லை என்று நாடகமாடும் துரோகிகளையும் டெப்பாசிட் இழக்கச் செய்வோம்.''என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்