கணவர் அடித்து துன்புறுத்தல்.! நடுரோட்டில் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு..!!

Senthil Velan
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (11:11 IST)
கடலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு பெண் குழந்தையுடன் வந்த பெண் ஒருவர்,  திடீரென எஸ்பி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இது குறித்து தகவல் அறிந்த எஸ்பி ராஜாராம் நேரடியாக வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த பெண் வடலூர் அருகே உள்ள வானதி ராயபுரத்தை சேர்ந்த பூவராக சாமி மனைவி காயத்ரி (23) என்பதும், அவர் தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. 
 
மேலும் அந்த பெண் கூறுகையில், தனது கணவர், தன்னையும் தனது பெண் குழந்தையையும், அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும், இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்து விடுமோ என்ற எண்ணத்தில் தினந்தோறும் தன்னை துன்புறுத்துவதாகவும் கூறினார். 
 
இதைக் கேட்ட எஸ் பி தற்போது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள், உங்களது கணவரை அழைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

ALSO READ: கார் விபத்தில் பெண் எம்எல்ஏ பலி..! தெலுங்கானாவில் நிகழ்ந்த சோகம்..!
 
இதன் பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் எஸ்பி அலுவலகவளாகத்தில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்