தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வருகிற ஏப்ரல் மாதத்தில் மதுரையில் நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு விஜயின் அடுத்தடுத்த அரசியல் செயல்பாடுகள், அனைவரையும் உற்று நோக்கம் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் ஏப்ரல் மாதம் மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், கட்சி ரீதியாக 100 மாவட்டங்களை உருவாக்கி நிர்வாகிகளை நியமித்த பிறகு மாநாட்டை நடத்த நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.