ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (07:43 IST)
இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது சென்னை. தமிழகத்தின் தலைநகரான சென்னைதான் மாநிலத்தின் இருதயம். ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்வளிக்கும் நகரங்களில் ஒன்று. உலக அளவில் சென்னை பலதுறைகளில் முன்னேறியுள்ளது.



 
 
சென்னை நகரம் உருவான ஆண்டு 1639, ஆகஸ்ட் 22ஆம் தேதி என்று கூறப்படுகிறது. 1639-ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கட்டியதைத் தொடர்ந்து சென்னையில் கட்டியதால் இந்நகரம் உருவானது. 
 
சுதந்திரம் பெற்ற பின்னர் மதறாஸ் மாநிலம் என்று அழைக்கப்பட்ட நிலையில் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது. பின்னர் 1996ஆம் ஆண்டு மதறாஸ் நகரம் என்பது சென்னை என்று மாற்றப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று 'சென்னை தினம்' உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை தினம் கொண்டாடும் அனைவரும் வெப்துனியா சார்பில் வாழ்த்துக்கள்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்