ஸ்டாலினுடன் ஹெச்.ராஜா சந்திப்பு

Arun Prasath
சனி, 2 நவம்பர் 2019 (12:54 IST)
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் திகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை ஹெச்.ராஜா சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை ஸ்டாலினிடம் வழங்க ஹெச்.ராஜா சென்றதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்