முதல்வர் வீட்டின் அருகிலேயே குப்பைகள் இருக்கும்போது?? .. நீதிமன்றம் கேள்வி

Arun Prasath

சனி, 2 நவம்பர் 2019 (09:55 IST)
முதல்வர் வீட்டின் அருகிலேயே குப்பைகள் மலை போல் இருக்கும்போது டெங்குவை எப்படி ஒழிக்கமுடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் சமீப நாட்களாக டெங்கு காய்ச்சலால் பலர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதனை கட்டுபடுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனிடையே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் பல இடங்களில் குப்பைகள் குவிந்திருப்பதே டெங்கு பரவுவதற்கான காரணம் எனவும், தமிழக முதல்வர் பழனிசாமி வீட்டின் அருகிலேயே குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன என்பதால் தமிழ்நாட்டின் நிலைமையை கற்பனை எப்படி இருக்கு,? என தெரிவித்துள்ளனர்.

அதன் பின்பு, நீதிபதிகள் தமிழக அரசை, டெங்கு குறித்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்