”நான் சுஜித் பேசுகிறேன்”..

Arun Prasath
சனி, 2 நவம்பர் 2019 (12:15 IST)
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் நினைவாக கல்வெட்டு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தென் அரசம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப பள்ளியில், சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த சுஜித்திற்கு நினைவாக கல்வெட்டு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

பின்பு நினைவு அஞ்சலியும் நடத்தப்பட்டது. அந்த கல்வெட்டில்” நான் சுஜித் பேசுகிறேன், நான் திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டி கிராமத்தில் எனது தாயின் கருவறையில் பிறந்து இரண்டு வயதில் ஆள்துழை கிணற்றின் கருப்பறையில் என் வாழ்க்கை முடிந்தது” என அந்த கல்வெட்டு தொடங்குகிறது.

மேலும் சுஜித் உருவப்படத்திற்கு மாணவ மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி  அஞ்சலி செலுத்தினர். அப்பள்ளியில் முன்னதாக தோண்டப்பட்ட ஆள்துழை கிணறு மழை நீர் சேகரிப்பாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்