யார் கொடுத்தது இவ்வளவு அதிகாரம்? அரசு மீறு எகிறிய எச் ராஜா!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (18:57 IST)
மத சடங்குகளில் தலையிடுவதற்கு அரசியல் சட்டப்படி அரசுத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என எச்.ராஜா பேட்டி. 
 
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வீதிகளில் சிலை அமைத்த, ஊர்வலம் செல்லுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. மக்கள் அவர்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. 
 
அரசின் இந்த அறிவிப்பிற்கு இந்து முண்ணனி கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் விநாயகர் சதுர்த்தி கால சிறப்பு வழிபாட்டை அனுமதிப்பது குறித்து தமிழ்நாடு அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து தற்போது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக அரசு தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் அரசு மதுக்கடைகளுக்கு அனுமதி அளித்தது. மதுக்கடைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்துக்கொண்டு எந்தவித சமூக இடைவெளியின்றி மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.
 
தமிழகத்தில் ஆண்டுக்கு 6 நாட்கள் இந்துக்கள் சமூக இடைவெளியுடன் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி மறுத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த முடிவை உடனடியாக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். 
 
இந்த உத்தரவு மத சுதந்திரத்தில் தலையிடுகின்ற செயல். மத சடங்குகளில் தலையிடுவதற்கு அரசியல் சட்டப்படி அரசுத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்