போயஸ் கார்டனில் வருமான வரித்துறை : திறக்கப்படும் ஜெ.வின் அறை?

சனி, 30 டிசம்பர் 2017 (10:04 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் இன்று மீண்டும் சோதனை நடத்துவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
கடந்த சில மாதங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகத்தில் பல இடங்களில் சோதனை செய்து வருகிறனர். ஜெ.வின் போயஸ் கார்டன் இல்லம், சசிகலா உறவினர்கள் இல்லங்கள் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டது. அதோடு, போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெ.வின் அறை மட்டும் சோதனை செய்யப்படவில்லை. அதற்கான அனுமதி அப்போது அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.
 
எனவே, அங்கு சசிகலா வசித்து வந்த அறையில் மட்டும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் பின் அவரின் இரு அறைகளையும் சீல் வைத்து சென்றனர்.
 
இந்நிலையில், இன்று காலை தீடீரென ஜெ.வின் வீட்டின் முன்பு 500க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு வந்துள்ளதாகவும், இன்று ஜெ.வின் அறைகள் திறக்கப்பட்டு அங்கு சோதனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட சில அதிகாரிகளும் அங்கு உள்ளனர்.
 
ஊடகங்களிடம், ஜெ.வின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து நடவடிக்கைகள் என்று கூறினாலும், உண்மையில், ஜெ.வின் அறைகள் திறக்கப்பட்டு அங்கு சோதனை நடத்தப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்