ஆதார் விபரங்களை பதிவு செய்த 50 ஆயிரம் ஊழியர்கள் திடீர் நீக்கம் மத்திய அரசு அதிரடி

சனி, 30 டிசம்பர் 2017 (07:52 IST)
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயம் என்ற நிலை ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு மத்திய , மாநில அரசுகள் ஆதார் அட்டையை அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் கட்டாயப்படுத்தி வருகின்றன



இந்த நிலையில் ஆதார் விவரங்களை பதிவு செய்வதில் விதிமீறல் நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ள மத்திய இணையமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், இது தொடர்பாக நடந்த விசாரணைக்கு பின்னர் 50,000 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் போலி ஆதார் அட்டைகளும் அதிகம் நடமாடுவதாகவும், இதனை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்