தமிழகத்தில் நாளை குரூப்-4 தேர்வுகள்...7 ஆயிரம் பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (20:07 IST)
கிராம அலுவலர், இள நிலை  உதவியாளர் உள்ளிட்ட்ட குரூப் 4  பதவிகளுக்கு வரும் 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடக்கவுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள், இளைஞர்கள் பலரும் இதற்கு விண்ணப்பித்தனர்.

இத்தேர்வில் கலந்துகொள்ள 9.35 லட்சம் ஆண்களும், 12.67 லட்சம் பெண்கள் ,131 திரு நங்கைகள் என சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான தேர்வு நாளை நடக்கவுள்ளது. இத்தேர்வு காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 316 தாலூகாவில், 7000 க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்