அமெரிக்காவில் குழந்தைகளுக்கு குரங்கம்மை தொற்று!

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (20:02 IST)
ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் குரங்கம்மை நோய்த் தொற்றுப் பரவி வந்த நிலையில், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படும் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில்,  அமெரிக்காவில் முதன் முறையாக குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளதாவது:  கலிபோர்னியாவில் ஒரு குழந்தைக்கு குரங்கம்பை  தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு அமெரிக்க குடியுரிமை இல்லாத குழந்தைக்கும் இப்பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது இரு குழந்தைகளும்  நலமாக இருப்பதாகவும், சிகிச்சை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்