என் பொண்டாட்டிய காணும்... மைக்செட்டில் கூவிய காங்கிரஸ் பிரமுகர்!

செவ்வாய், 7 ஜனவரி 2020 (16:11 IST)
ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற தனது மனைவியை காணவில்லை என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மைக்செட்டில் புலம்பியுள்ளார். 
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தனது மனைவியை யாரோ கடத்திவிட்டனர் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மைக் செட் வைத்து கூச்சலிட்டுக் உள்ளார். 
 
மறைமுக தேர்தலுக்காக பதவிகளை கைப்பற்றுவதற்காக மாற்றுக் கட்சி கவுன்சிலர்களை அழைத்துச் செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் மனைவியை யாரோ கடத்தி விட்டனர் என இவர் கூச்சலிட்டுள்ளார். 
 
ஆனால், விசாரித்த பின்னர்தான் தெரியவந்தது உறவினர் வீட்டில் அவரது மனைவி பாதுகாப்பாக உள்ளார் என்பது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்