ஜூலை 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி இங்கிலாந்தில் இருப்பார். அங்கு அவர் இந்தியா-இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திடுவார். இந்த ஒப்பந்தம், இங்கிலாந்துக்கு செல்லும் 99% இந்திய ஏற்றுமதிகளுக்கான வரிகளைக்குறைக்கும் என்பதால், இரு நாடுகளின் வர்த்தக உறவில் இது ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு பிரதமர் மோடி கடந்த 2019 ஆம் ஆண்டு மாலத்தீவு பயணம் செய்த நிலையில், தற்போதுதான் அடுத்த கட்டமாக பயணம் செய்கிறார். இந்த பயணத்தின் போது இந்தியா-மாலத்தீவு இடையிலான உறவைச் சீர் செய்வதிலும், கூட்டு முயற்சிகளில் உறவை மேம்படுத்துவதிலும் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.