மூன்று மாதங்களுக்கு வங்கி இ.எம்.ஐ வசூலிக்கப்படாது! – நிதித்துறை செயலாளர்!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (15:17 IST)
அடுத்த மூன்று மாதங்களுக்கு வங்கிகளுக்கான இ.எம்.ஐ மற்றும் வட்டிகளை செலுத்த தேவையில்லை என தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுபாட்டு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அன்றாட வேலை செல்லும் மக்கள் பாதிப்புள்ளாகியுள்ள நிலையில் அவர்களுக்கு மாத நிவாரணம் தர அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் தொழில்கள் முடங்கியுள்ளதால் மக்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த மூன்று மாதங்களுக்கு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தவணை மற்றும் வட்டிகளை செலுத்த கால அவகாசம் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் வங்கிகள் இதுகுறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தன.

இந்நிலையில் இன்று செய்தி வெளியிட்டுள்ள தமிழக நிதி செயளாலர் கிருஷ்ணன் அடுத்த மூன்று மாதங்களுக்கு வங்கி கடன்கள் வசூலிக்கப்படாது எனவும், இதுகுறித்த ஆர்பிஐ அறிவிப்பு சம்பந்தப்பட்ட வங்கி இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்