சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த அவகாசம் நீட்டிப்பு! – அமைச்சர் தகவல்!

செவ்வாய், 31 மார்ச் 2020 (12:17 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளாட்சி வரிகளை செலுத்த அவகாசம் அளித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண தொகை வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மின் கட்டணங்களை செலுத்த ஏப்ரல் 15 வரை கால நீட்டிப்பு செய்துள்ளதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

பலர் வங்கி கடன் செலுத்த கால அவகாசம் ஏற்படுத்தி தர வேண்டுமென கேட்டு வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அரசு சில கால அவகாசங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி வரிகளான குடிநீர் வரி, சொத்து வரி, கடை வரி உள்ளிட்டவற்றையும் செலுத்த கால அவகாசம் அளித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இந்த வரிகளை செலுத்த ஜூன் வரை கால அவகாசம் அளிக்கப்படும் எனவும், உள்ளாட்சி வரிகள் குறித்து மக்கள் கவலை கொள்ள தேவையில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்