ஆன்லைன் விளையாட்டு மசோதாவிற்கு விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (18:41 IST)
ஆன்லைன் தடை சட்டத்திற்கான மசோதாவிற்கு இன்னும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வரும் நிலையில் இந்த மசோதா குறித்து விளக்கம் கேட்டு தமிழக கவர்னர் ரவி அவர்கள் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
தமிழக சட்டமன்றத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி ஆன்-லைன் விளையாட்டுகளை தடை செய்வது குறித்து சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த மசோதா குறித்த சில கேள்விகளை கேட்டு அந்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு ஆளுனர் ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்