சுதந்திரத்தை கருப்பு நாளாக அறிவித்தவர்களை கொண்டாடுகிறார்கள்: கவர்னர் ரவி

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (16:25 IST)
சுதந்திரம் கிடைத்த போது அதை கருப்பு நாளாக அறிவித்தவர்களை தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள் என மருது சகோதரர்கள் நினைவு தினவிழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றி உள்ளார்.
 
பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட ராபர்ட் கால்டுவெல் தான் திராவிடம் என்று பிரித்தவர் என்றும், இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்றும், தமிழ்நாடு புண்ணிய பூமி, இங்கு ஆரியம்- திராவிடம் என எதுவும் கிடையாது" என்றும் அவர் மேலும் கூறினார்.
 
காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்கத்தலைவர்களாக மாற்றியிருப்பார்கள் என்றும் கவர்னர் ரவி தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்