'சரக்கு' படத்தை நான் சொந்த செலவில் எடுத்துள்ளேன், இதில் அம்பானி, அதானி பெயர்கள் இருக்கக்கூடாது என சென்சார் கட் கொடுக்கிறார்கள். கருத்து சுதந்திரம் இல்லை, அந்த படத்தில் எந்த கவர்ச்சியும் இல்லை
திருநங்கைகளை மேம்படுத்தி காட்டி உள்ளேன், ஆனால் அதில் சென்சார் கட் கொடுக்கிறார்கள், தணிக்கை வாரியம் நடுநிலையாக இருக்க வேண்டும், நான் ஒன்றும் நெளிகிற புழு இல்லை, மிதித்து கொல்வதற்கு என்று 'சரக்கு' படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள சென்சார் கட் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார்.
மன்சூர் அலிகான், யோகிபாபு, பாக்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ஜெய்குமார் என்பவர் இயக்கியுள்ளார்.