சனாதனத்தை ஒழித்து இந்தியாவை உடைக்க முயற்சி.. உதயநிதிக்கு கவர்னர் ரவி கண்டனம்..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (08:29 IST)
சனாதனத்தை ஒழித்து இந்தியாவை உடைக்க முயற்சி செய்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கவர்னர் ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்
 
 இன்று காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர்  சனாதனம் என்பது பாரதத்தின் ஆன்மா என்றும், நிதியமானது என்றும், அனைத்தையும் உள்ளடக்கியது என்றும் ஆனால் எதிரிகள் அதை ஒழிக்க முயல்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மீண்டும் பாரதத்தை உடைப்பதே அவர்களின் மறைமுகமாக செயல் திட்டம் என்றும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஜி 20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் சனாதன தர்மத்தின் முக்கிய சாராம்ங்களை உலகமே ஏற்றுக் கொண்டது என்றும் அவர் கூறினா.ர்  உதயநிதி ஸ்டாலினை கவர்னர் ரவி நேரடியாக கூறவில்லை என்றாலும் அவரது இந்த கருத்து உதயநிதி ஸ்டாலினை குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்