ஜெயம் ரவியின் 30வது படத்தின் டைட்டில்- பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

திங்கள், 18 செப்டம்பர் 2023 (10:23 IST)
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான திரைப்படம் ’ஜேஆர் 30’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பஸ்ட் ரிலீஸ் ஆகி உள்ளது. 
 
இந்த படத்திற்கு படக்குழுவினர் பிரதர் என்ற டைட்டிலை வைத்துள்ளனர்.  இந்த டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த இறைவன் திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்