டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திரபாபு.. கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுனர் ரவி..!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (09:25 IST)
டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் கோப்புகளை தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சமீபத்தில் ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவுக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்புகள் தயார் செய்து ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்த கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டு உள்ளார் என்று தகவல் நேற்று வெளியானது 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுனர் ரவி திருப்பி அனுப்பி உள்ளதாக தெரிகிறது
 
இந்த பதவியில் உள்ளவர்கள் 62 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றும் ஆனால் சைலேந்திரபாபு 61 வயது ஆகிவிட்டது என்றும் எனவே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை இந்த நியமனத்தில் பின்பற்றப்படவில்லை என்றும் ஆளுனர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்